கணவர் தாக்கியதால் மூளையில் பாதிப்பு, வாசனை தெரியலை: நடிகை கவலை!

கணவர் தாக்கியதால் மூளையில் பாதிப்பு, வாசனை தெரியலை: நடிகை கவலை!

கணவர் தாக்கியதால், தனது மூளையில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் வாசனை தெரியவில்லை என்றும் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே. இந்தி நடிகையான இவர், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பரபரப்பை கிளப்புவார். இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக, கோவா போலீஸில் சாம் பாம்பே மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதனால், சாம் பாம்பே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

பூனம் பாண்டே, சாம் பாம்பே
பூனம் பாண்டே, சாம் பாம்பே

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் லாக்கப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூனம் பாண்டே, கணவரால் நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார். இப்போது, கணவரின் கொடுமையால் வாசனையை உணர முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

’’எனக்கு இப்போது வாசனை தெரியாது. அருகில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். என் கணவர் தாக்கியதில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு வாசனை தெரியாமல் போய்விட்டது. ஆனால், இப்போது மனதளவிலும் உடல் ரீதியாகவும் வலிமையாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ள பூனம் பாண்டே, அதற்கான சிகிச்சையை தொடர இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in