விஜய் எளிமையான, இனிமையான மனிதர்: பூஜா ஹெக்டே

விஜய் எளிமையான, இனிமையான மனிதர்: பூஜா ஹெக்டே

`விஜய் எளிமையான, இனிமையான மனிதர்' என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். அவர். `பிரபாஸுடன் நான் நடித்துள்ள ’ராதே ஷ்யாம்’ படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இது அழகான காதல் கதையை கொண்ட படம். பான் இந்தியா படமாக வெளியாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

அடுத்து விஜய்யின் ’பீஸ்ட்’ வெளியாக இருக்கிறது. விஜய் எளிமையான, இனிமையான மனிதர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அந்தப் படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘வைகுண்டபுரம்லோ’ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல், என்னை பல்வேறு பகுதிகளில், ஏன் வெளிநாட்டில் கூட என்னை அடையாளப்படுத்தி இருக்கிறது. டிரெண்ட் ஷெட்டர் பாடல் அது. எனக்குப் பிடித்த பாடலும் அதுதான்.

அடுத்து ரன்வீர் சிங்குடன் ’சிர்க்கஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். சல்மான் கானுடன் ’கபி ஈத் கபி தீவாளி’ படமும் இருக்கிறது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்கிறேன். தொடர்ந்து எனக்கு சிறந்த படங்கள் கிடைத்து வருகிறது. இந்தப் படங்களில் எனது வெவ்வேறு அவதாரங்களை ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியான பயணமாக இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in