டாப் ஹீரோவின் பான் இந்தியா படத்தில் பூஜா ஹெக்டே

டாப் ஹீரோவின் பான் இந்தியா படத்தில் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே, டாப் ஹீரோ நடிக்கும் பான் இந்தியா படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. 'நேட்டோ' படம் மூலம் தமிழுக்கும் வந்த இவர், இப்போது ’லைகர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தி நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா

தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், புரி ஜெகநாத், விஜய் தேவரகொண்டா மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர்.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு ’ஜனகனமண’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருந்தனர். மலையாளத்தில் இதே தலைப்பில் படம் வெளியானதால், தலைப்பை ஜேஜிஎம் (JGM) என்று வைத்துள்ளனர். இதை நடிகை சார்மி, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, புரி ஜெகநாத் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக, பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை பூஜா, இப்போது சல்மான் கான் ஜோடியாக ’கபி ஈத் கபி தீவாளி’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் ஜேஜிஎம் படத்தில் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in