2 நாளில் 150 கோடியை வாரிக்குவித்த 'பொன்னியின் செல்வன்'

2 நாளில் 150 கோடியை வாரிக்குவித்த 'பொன்னியின் செல்வன்'

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு நாட்களில் 150 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய் , கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் செப்.30-ம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்' இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in