`பொன்னியின் செல்வன்2’ வெளியீடு எப்போது?- புதுத் தகவல்

`பொன்னியின் செல்வன்2’ வெளியீடு எப்போது?- புதுத் தகவல்

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியாவது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலை மணிரத்தினம் படமாக்கி உள்ளார்.

புத்தகமாக ஐந்து பாகங்களை இந்தக் கதை உள்ளடக்கியுள்ளது. ஆனால், படமாக இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ளனர். இதன் முதல் பாகம் இந்த மாத இறுதியில் அதாவது செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதற்காக பிரத்யேகமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகம் வெளியாகி ஒன்பது மாதங்கள் கழித்து அடுத்த வருடம் அதாவது ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.

மேலும் உலகம் முழுக்க படம் வெளியாக இருக்கும் நிலையில், சென்டிமென்ட்டாக தஞ்சாவூரில் பெருவுடையார் கோயிலுக்கு போனப் பின்பு அடுத்து துபாய், சிங்கப்பூர், மலேசியா என படக்குழு புரோமோஷன்களுக்காக செல்ல இருக்கிறது. இதுக் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in