'பொன்னியின் செல்வன்' வெளியான திரையரங்குகளில் திடீர் சோதனை: ரசிகர்கள் அதிர்ச்சி

'பொன்னியின் செல்வன்' வெளியான திரையரங்குகளில் திடீர் சோதனை: ரசிகர்கள் அதிர்ச்சி

'பொன்னியின் செல்வன்' வெளியான ஐந்து திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீரென சோதனையிட்டது சேலத்தில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் 'பொன்னியின் செல்வன் ' திரைப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இன்று படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே ஐந்து சினிமா திரையரங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்.

அப்போது காலாவதியான குளிர்பானங்கள், அவற்றைத் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் விழுந்திருந்தது தெரிய வந்தது. அந்தப் பாலை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையொட்டி ரசிகர்கள் படம் பார்ப்பதில் ரசிகர்கள் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இதன் பின் படம் ஒளிபரப்பானது. இந்த சோதனை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in