பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீடு: பிரம்மாண்டத்தைக் காட்டத் தயாராகும் படக்குழு!

பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீடு: பிரம்மாண்டத்தைக் காட்டத் தயாராகும் படக்குழு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வம் படத்தை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் டிரெய்லரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 6-ம் தேதி வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லரை பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் வேலைகள் தொடங்கியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in