நவ.4-ல் ஓடிடியில் ரிலீஸாகும் 'பொன்னியின் செல்வன்'?

நவ.4-ல் ஓடிடியில் ரிலீஸாகும் 'பொன்னியின் செல்வன்'?

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஓடிடியில் நவ.4-ம் தேதி ரிலீஸாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ' பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய நாவலை மையப்படுத்தி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

தமிழில் தயாராகி இந்திய சினிமா மொழிகளில் வெளியிட்டு வசூலில் சாதனைப்படைத்து வரும் இப்படம் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' இதுவரை 460 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இப்படம் ஓடிடியில் நவ.4-ம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in