இம்மாத இறுதியில் ’பொன்னியின் செல்வன்’ டீசர்!

இம்மாத இறுதியில் ’பொன்னியின் செல்வன்’ டீசர்!

’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர், இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை, படமாக இயக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஓடிடி நிறுவனம் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை படக்குழு மறுத்திருந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் ஒன்றை கடந்த பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அப்போது வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, இந்த மாதம் இறுதியில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. ஒரு நிமிடம் ஓடும் இந்த டீசரில் முக்கிய கேரக்டர்களின் தோற்றம் வெளியாகும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in