ஏ.ஆர்.ரஹ்மான் அதிருப்தி... மணிரத்னம் அதிர்ச்சி: `பொன்னியின் செல்வன்' ரீ ஷூட்டா?

ஏ.ஆர்.ரஹ்மான் அதிருப்தி... மணிரத்னம் அதிர்ச்சி: `பொன்னியின் செல்வன்' ரீ ஷூட்டா?

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான `பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, அதாவது ரீ ஷூட் மீண்டும் ஆரம்பிக்க உள்ளார் என்றும் அது வதந்தி என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் `பொன்னியின் செல்வன்' திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நடிகர் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா உள்ளிட்டோர் நடிப்பில் முதல் பாகம் உருவாகியுள்ளது.

இதனிடையே `பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்தை பார்த்து உள்ளார். அவர் அதைக் கண்டு அதிருப்தி தெரிவித்த நிலையில், மணிரத்னம் அதிர்ச்சி அடைந்து, ஒரு சில காட்சிகளை ரீ ஷூட்டிங் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே, காற்று வெளியிடை, கடல், இருவர் உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைத்த நிலையில், முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் `பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்து அதிருப்தி தெரிவித்ததால் மணிரத்னம் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஆனால், இது வதந்தி என படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிலவற்றை மாற்ற சொல்லியுள்ளார். அதனால் கிராபிக்ஸ் காட்சிகளில் மட்டும்தான் சில மாற்றம் இருக்குமே தவிர பொன்னியின் செல்வன் படத்தை மீண்டும் சூட்டிங் நடக்கும் என்பது எல்லாம் வதந்தி என்கிறது படக்குழு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in