ஜன.8-ல் சன் டிவியில் 'பொன்னியின் செல்வன்'!

ஜன.8-ல் சன் டிவியில் 'பொன்னியின் செல்வன்'!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஜன.8-ம் தேதி சன்டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அதே பெயரில் திரைப்படமாக இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கியுள்ளார். நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன் ’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்.30-ம் தேதி வெளியானது.

உலகம் முழுவதும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த பாகத்திற்கும் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. 2023 ஏப்.28-ம் தேதி 'பொன்னியின் செல்வன்' 2 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் '1 சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. 2023 ஜன.8-ம் தேதி மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் 1 ஒளிபரப்பாகும் என சன் டிவி ப்ரமோ வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in