300 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்த ‘பொன்னியின் செல்வன்’ - தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

300 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்த ‘பொன்னியின் செல்வன்’ - தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

கடந்த வாரம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. உலகம் முழுவதுமே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டியுள்ளது என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன் 1’ படத்தின் வசூல் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ள வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், “ உலக அளவில் முதல் நாள் வசூல் - ரூ.78.29 கோடி, இரண்டாம் நாள் - ரூ.60.16 கோடி, மூன்றாவது நாள் - ரூ.64.42 கோடி, நான்காவது நாள் - ரூ.25.37 கோடி, ஐந்தாவது நாள் - ரூ.30.21 கோடி, ஆறாவது நாள் - ரூ.29.40 கோடி, ஏழாவது நாள் - ரூ.20.74 கோடி என மொத்தம் ரூ.308.59 கோடி வசூல் செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ தமிழக அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.25.86கோடி, 2ம் நாளில் ரூ.21.34 கோடி, 3ம் நாளில் ரூ.22.51 கோடி, 4ம் நாளில் ரூ.13.08 கோடி, 5ம் நாளில் ரூ.17.95 கோடி, 6ம் நாளில் ரூ.16.79 கோடி, 7ம் நாளில் ரூ.10.15 கோடி என மொத்தம் ரூ.127.68 கோடி வசூல் செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ் சினிமாவில் ரஜினியின் ‘2.0’, ‘எந்திரன்’, ‘கபாலி’ ஆகிய படங்களும், கமலின் ‘விக்ரம்’ படமும் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் ‘பொன்னியின் செல்வனும்’ இணைந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய் , கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in