`பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை தவிர்க்க இதுதான் காரணம்'- விளக்கும் மணிரத்னம்

`பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை தவிர்க்க இதுதான் காரணம்'- விளக்கும் மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவிஞர் வைரமுத்துவை தவிர்க்க என்னக் காரணம் என இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, ‘ஜெயம்’ ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் மணிரத்னம் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவிஞர் வைரமுத்துவை பயன்படுத்தாமல், புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன், வருத்தம் இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த மணிரத்னம், ‘வைரமுத்துவுடன் அதிகம் வேலை பார்த்துவிட்டேன். அவரைத் தாண்டி நிறைய திறமையாளர்களும் இருக்கிறார்கள். புதுத் திறமைகளுக்கு வாய்ப்புக் கொடுக்க விரும்பினேன். அதற்காகத்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டேன்’ என பதிலளித்துள்ளார்.

அதேபோல, தமிழில் வெளியான ட்ரெய்லரில் நம்பி கதாபாத்திரம் ‘அய்யய்யோ’ என சொல்லும்படி ஒரு இடத்தில் வசனம் அமைந்திருக்கும் மற்ற மொழிகளில் ‘நாராயணா’ என பேசியிருப்பது ஏன் என கேட்டபோது, அது மாற்றப்பட்டிருக்கிறது எனவும், பட்டை- நாமம் குறித்தான கேள்வி எழுப்பிய போது அதுவும் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கல்கி எழுதிய விஷயங்களே படத்தில் கையாளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in