`இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது கஷ்டம்'- சொல்கிறார் `பொன்னியின் செல்வன்’ கார்த்தி

`இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது கஷ்டம்'- சொல்கிறார் `பொன்னியின் செல்வன்’ கார்த்தி

’பொன்னியின் செல்வன்’ படத்தில் இயக்குநர் மணிரத்னமுடன் வேலைப் பார்த்தது குறித்து நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சென்னையில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, ‘ஜெயம்’ ரவி, பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இயக்குநர் மணிரத்னமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது, ‘இயக்குநர் மணிரத்னமுடன்தான் என் சினிமா பயணம் ஆரம்பித்தது. அவருடன் உதவி இயக்குநராக வேலைப் பார்த்த காலத்தில் இருந்தே அவரது வொர்க்கிங் ஸ்டைல் என்பது எனக்குத் தெரியும். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காகத் தாய்லாந்தில் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அதிகாலை 2 மணிக்கே எல்லோரும் எழுந்து மேக்கப் போட்டுவிட்டு, 6 மணிக்கு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று விடுவோம். தாய்லாந்தில் முடித்து விட்டு ஹைதராபாத் சென்றபோது தான் 2 மணி என்பது 5 மணியானது.

மற்றப் படங்களை விடவே, இந்தப் படத்தில் மணி சார் பயங்கர ஜாலியாக, கூலாக இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் மட்டும் தான் அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். படப்பிடிப்பு முடிந்ததும் அவர் சொல்லும் ஒன்லைனர்கள் எல்லாம் அவ்வளவு ஜாலியாக இருக்கும். இவரது வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு தெரியும் என்பதால் நான் பழகி விட்டேன். மற்றவர்களுக்கு தான் கொஞ்சம் கஷ்டம்’ எனச் சிரித்துக் கொண்டே முடித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in