`வெயிட் பண்ணுங்க... அந்த 2 தமிழ்ப் படங்கள் `பான் இந்தியா’வில் மிரட்டும்!’

`வெயிட் பண்ணுங்க... அந்த 2 தமிழ்ப் படங்கள் `பான் இந்தியா’வில் மிரட்டும்!’
பொன்னியின் செல்வன் படத்தில்

ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப் 2 படங்களை விட அந்த 2 தமிழ்ப் படங்கள், பான் இந்தியா முறையில் மிரட்டும் என்கிறார்கள், தமிழ் சினிமா வில்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த ’புஷ்பா’ படம், பான் இந்தியா முறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதை சுகுமார் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கும் சரியான வரவேற்பு கிடைத்துள்ளதால், இதன் அடுத்தப் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறார்கள்.

இதையடுத்து வெளியான ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படமும் வசூல் ரீதியாக மிரட்டி இருக்கிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்கள் நடித்திருந்ததும் படத்துக்கு பிளஸ். அடுத்து வெளியான கே.ஜி.எஃப் 2 படம் இந்தியா முழுவதும் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீனிதி ஷெட்டி உட்பட பலர் நடித்த இந்தப் படத்தின் வசூல், இப்போது வரை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்தியன் 2 - ஷங்கர்
இந்தியன் 2 - ஷங்கர்

இதையடுத்து சிலர், தமிழ் சினிமாக்களின் கதைப்பற்றியும் பான் இந்தியா முறை வெளியீட்டில், தமிழ் சினிமா பின் தங்கி இருப்பதாகவும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பதில் சொல்வது போல சில தயாரிப்பாளர்கள், ’இவங்களுக்கு வேற வேலையே இல்லை’ என்கிறார்கள். ஷங்கரின் ’இந்தியன் 2’ படம் சரியான நேரத்தில் வெளியாகி இருந்தால், ’பான் இந்தியா’வில் அதுதான் முதன் முதலில் பரபரப்பாகி இருக்கும் என்கிறார்கள்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதால், ஷங்கர், இப்போது ராம் சரண் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதுவும் பான் இந்தியா படம்தான்.

இந்தியன் 2
இந்தியன் 2

இதே போல, மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படமும் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகி இருந்தால், இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றிருக்கும். ’அது அப்படிப்பட்ட கதையை கொண்டதுதான், இந்த இரண்டு படங்களும் மேக்கிங்கிலும் கதை அளவிலும் வேற லெவல் பிரம்மாண்டமாக இருக்கும். வந்தியத்தேவனுக்கும் இந்தியன் தாத்தாவுக்கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் குவிவார்கள். அதனால் தாமதமானாலும் பான் இந்தியா முறையில் இந்தத் தமிழ்ப் படங்கள் சாதிக்கும்’ என்கிறார்கள் கோலிவுட்டில்.

Related Stories

No stories found.