உலகமே கொண்டாடும் ‘பொன்னியின் செல்வன்’ - 3 நாட்களில் குவித்த வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகமே கொண்டாடும் ‘பொன்னியின் செல்வன்’ - 3 நாட்களில் குவித்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மிக பிரமாண்டமான முறையில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் சனிக்கிழமையன்று சிறிது குறைந்தாலும், அதன் மூன்றாவது நாளான நேற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தெறிக்கவிட்டது, இதனால் இப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டு பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்த லைகா புரொடக்சன்ஸ், “உலகெங்கும் வரலாறு படைக்கிறது. எங்கள் மீது அன்பினை பொழியும் அனைத்து பார்வையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டு 200 கோடி ரூபாய் வசூல் சாதனையை தெரிவித்துள்ளது.

அஜித்தின் ‘வலிமை. மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களின் முதல் வார இறுதி வசூலை முந்தி ‘பொன்னியின் செல்வன்-1’ இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்களை பகிர்ந்துள்ள வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், நாள் 1 – ரூ.78.29 கோடி, நாள் 2 – ரூ. 60.16 கோடி, நாள் 3 – ரூ. 64.42 கோடி என உலகளவில் மொத்தம் – ரூ.202.87 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் இப்படம் முதல் நாளில் ரூ.25.86 கோடி,

இரண்டாம் நாளில் 21.34 கோடி, மூன்றாம் நாளில் 22.51 கோடி என மொத்தமாக 3 நாட்களில் ரூ.69.71 கோடி வசூல் செய்துள்ளது எனவும் புள்ளிவிவரங்களை பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய் , கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in