'அரபிக்குத்து’ பாட்டுக்கு ஆட்டம் போட்ட ‘பொன்னியின் செல்வன்’ நடிகை! வைரலாகும் வீடியோ!

'அரபிகுத்து’ பாடலில்...
'அரபிகுத்து’ பாடலில்...

’அரபிக்குத்து’ பாடலுக்கு நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி காருக்குள் நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

’ஜகமே தந்திரம்’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானாலும் ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியாக தான் பலருக்கும் பரிச்சியமானார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. இவர் நடித்துள்ள ‘கிங்க் ஆஃப் கோதா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் புரோமோஷனுக்காக கடந்த சில நாட்களாக பரபரப்பாக இயங்கி வந்தார். இந்தப் படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றிற்காக ரித்திகா சிங்கும் துல்கர் சல்மானுடன் நடனம் ஆடியுள்ளார்.

இதனால் படத்தின் புரோமோஷனுக்காக அவரும் படக்குழுவினருடன் கலந்து கொண்டார். இதில் அரபிக்குத்து பாடலுக்கு ரித்திகாவும் ஐஸ்வர்யாவும் காருக்குள் இணைந்து ஆட்டம் போட்டுள்ள ஜாலி வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in