'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2 வது பாகம் ரிலீஸ் தேதி அப்டேட்

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின்  2 வது பாகம்  ரிலீஸ் தேதி அப்டேட்

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2வது பாகம் எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.

எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிருந்தார். இப்படத்தில், நடிகர் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் படம் வெளியானது. உலகளவில் இப்படம் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2வது பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், ஏப்ரல் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in