
‘பொன்னியின் செல்வன்2’ இசை வெளியீட்டுத் திட்டங்கள் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் த்ரிஷா, கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து, இதன் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது போலவே, இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக அதன் புரோமோஷனல் யுக்திகளும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து, இரண்டாம் பாகத்திற்கும் அதேபோன்று புரோமோஷனல் யுக்திகளையும் கையாள படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, கொச்சி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பல இடங்களுக்கு படக்குழு ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.