ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியோடு பிரம்மாண்ட விழா: 'பொன்னியின் செல்வன்' டிரெய்லரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியோடு பிரம்மாண்ட விழா: 'பொன்னியின் செல்வன்' டிரெய்லரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6-ம் தேதி ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சியுடன் ‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் இப்படத்தின் டிரெய்லரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, நடித்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியுடன் ‘பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

அந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரை லைக்கா மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் அழைத்துள்ளனர். அதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடலை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ நிகழ்ச்சிக்கு தமிழக முதல்ர் ஸ்டாலினை அழைத்துள்ளனர். அவர் படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளார். சென்னையைப் போலவே ஐதராபாத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அல்லது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in