சீறும் கடல்,சிலிர்க்கும் குதிரைகள்,மீளும் சோழன் - கமல் குரலில் கர்ஜிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர்!

சீறும் கடல்,சிலிர்க்கும் குதிரைகள்,மீளும் சோழன் - கமல் குரலில் கர்ஜிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர்!

மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ட்ரைலர் “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்...சோழநாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன்” என்று நடிகர் கமல்ஹாசனின் குரலுடன் தொடங்குகிறது.

சிங்கமுக பாய்மரக்கப்பல், கடலில் அனல்கிளப்ப மோதிகொள்ளும் படகுகளுடன் குதிரை மீதேறி சீற்றம் காண்பிக்கும் ஆதித்த கரிகாலனுடன்(விக்ரம்) டிரைலர் ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து அருண்மொழி வர்மன் (ஜெயம்ரவி), வந்தியத்தேவன்(விக்ரம்), குந்தவை(த்ரிஷா), நந்தினி(ஐஸ்வர்யா ராய்), மதுராந்தகன்(ரகுமான்) அறிமுகமாகிறார்கள். கடம்பூர் அரண்மனை, இலங்கை யுத்தம், தஞ்சை சிம்மாசனம் என டிரையிலரின் ஓவ்வொரு நொடியுமே அத்தனை பிரமிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. டிரையிலரின் பக்கபலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ஒளிப்பதிவும் இருக்கிறது.

‘பொன்னியின் செல்வன்’ டிரைலர் வெளியானது முதலே அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் 10 மணிநேரத்தில் 26 லட்சம் பேர் தமிழ் டிரைலரை பார்வையிட்டுள்ளனர். இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே படபடக்க ஆரம்பித்துவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in