'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ' பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய நாவலை மையப்படுத்தி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை ரூ.470 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், , 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in