`பொன்னியின் செல்வன்' உங்கள் படம்; ஆதரவு தாருங்கள்'- தெலுங்கு மக்களிடம் பேசிய நடிகை சுஹாசினி

`பொன்னியின் செல்வன்' உங்கள் படம்; ஆதரவு தாருங்கள்'- தெலுங்கு மக்களிடம் பேசிய நடிகை சுஹாசினி

“பொன்னியின் செல்வன் தமிழ் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் ஆந்திரா, தெலங்கானாவில் ஷூட் செய்யப்பட்டது. எனவே இது உங்களின் படம்" என்று நடிகை சுஹாசினி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள `பொன்னியின் செல்வன்' இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி சோழனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் என பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் ஆந்திராவில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி கலந்துகொண்டு பேசுகையில், “பொன்னியின் செல்வன் உங்களின் படம். இது தமிழ் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஷூட் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 நாட்கள் புதுச்சேரி, பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தது. மீதமுள்ள காட்சிகள் ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. எனவே இது உங்களின் படம். நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார். சுஹாசினியின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in