'பொன்னியின் செல்வன்' என்னைப் பொறுத்தவரை ஒரு காதல் படம்! - சீயான் விக்ரம்

'பொன்னியின் செல்வன்'  என்னைப் பொறுத்தவரை ஒரு காதல் படம்! - சீயான் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி சென்னை, கேரளா, பெங்களூரு, டெல்லி என பல்வேறு இடங்களுக்கு படக்குழு புரோமோஷன்களுக்காக சென்றது. சென்னையில் ஆரம்பித்த புரோமோஷன் பணிகள் மீண்டும் சென்னையிலே முடித்திருக்கிறார்கள்.

இதில் கலந்து கொண்ட படக்குழு பேசியதாவது, 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆதித்த கரிகாலனான நடிகர் விக்ரம் பேசியிருப்பதாவது, " படம் நாளை வெளியாக இருக்கிறது. திரையரங்குகளுக்கு மீண்டும் கூட்டம் வர ஆரம்பித்திருக்கும் நிலையில், கொரோனா பரவலும் இருக்கிறது என்பதை மறக்க கூடாது. அதனால், தியேட்டர் உரிமையாளர்கள் வயதானவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். காதல் தான். இந்தப் படத்தின் மையக்கரு தந்தை- மகன், தங்கை- அண்ணன் இப்படி இவர்களுக்குள் இருக்கும் காதல் கதை. இதெல்லாம் தாண்டி எனக்கு பிடித்தது ஆதித்த கரிகாலனுக்குள் இருக்கும் காதல் தான். அவனுக்குள் இருக்கும் காதல் எதை வேண்டுமானாலும் செய்ய சொல்லும். அதைத்தான் எனக்குப் பிடித்ததாக நான் இயக்குநரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன். நிச்சயம் 'பொன்னியின் செல்வன்' காதல் காவியமாக அமையும்" என்றார்.

நடிகை ஷோபிதா, " இந்தப் படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இயக்கம், இசை, உடை, ஒளிப்பதிவு என இந்தப் அனைத்து துறைகளுமே திறமையானவர்கள். இந்தப் படத்தில் எனக்கு பிடித்த பாடல் த்ரிசாவுடன் நான் நடித்த 'சொல்' பாடல் தான் என்றார்

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், " இந்தப் படத்துக்காக மணி சார் கூப்பிட்ட நாளில் இருந்தே எனக்கு பதட்டமாக தான் இருந்தது. இயக்குநருக்கு ஒரு படம் எப்போதும் ஒரு குழந்தை போல தான். கிட்டத்தட்ட 30 வருடங்களாக காத்திருந்து கொடுக்கிறார். நாங்களும் படத்தைப் பார்க்க பார்வையாளர்களாக காத்திருக்கிறோம். அவர் படத்தில் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எல்லாருடனும் நடித்திருப்பதால் நான் கொஞ்சம் லக்கி என்றுதான் சொல்வேன்" என்றார் மகிழ்ச்சியாக.

பூங்குழலி வேடம் ஏற்றிருக்கும் நடிகை ஐஷ்வர்ய லக்‌ஷ்மி, "இந்தப் படத்துக்கு தேவையான அன்பு, ஆதரவு எல்லா பக்கமிருந்தும் கிடைத்தது மகிழ்ச்சி. அடுத்த மாதம் 7 ம் தேதி வரை டிக்கெட் இல்லை என்பது கேட்கவே நிறைவாக இருக்கிறது. மணி சார் உலகத்தில் நானும் ஒரு அங்கம். படம் பார்த்துவிட்டு உங்கள் அன்பையும் கொடுங்கள்". என்றார்

'குந்தவை'யான நடிகை த்ரிஷா, " சென்னையில் தொடங்கிய இந்த சோழ பயணம் நாங்கள் திட்டமிட்டது போல எல்லா ஊர்களுக்கும் போய் விட்டு மீண்டும் சென்னையில் வந்து சர்க்கிளாக முடிந்திருக்கிறது. என்னுடைய எந்தப் படம் வெளியாவதற்கு முன்பும் பதட்டப்பட்டதில்லை. ஆனால், இப்போது பயம் இருக்கிறது. இது போன்ற புரோமோஷன்கள் நான் செய்ததில்லை. இந்த எல்லா அன்பிற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். முதல்முறையாக பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கிறேன். எங்கள் குழந்தையை நாங்கள் உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி".

நடிகர் பார்த்திபன், "'நானே வருவேன்' என படம் பிடித்துதான் இன்று இங்கு வந்திருக்கிறேன். நாளை தஞ்சையில் படம் பார்க்க செல்கிறேன். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். கிட்டத்தட்ட அடுத்த ஆறு வருடத்திற்கு இது பற்றி தான் டாக் இருக்கும். இதுவரை எந்தப் படத்திற்கும் இந்த அழுத்தம் சந்தித்ததில்லை. அதில் நானும் ஒரு சின்ன அங்கம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in