`அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது'- ரசிகர்களுக்கு விஜய் கட்டளை

`அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது'- ரசிகர்களுக்கு விஜய் கட்டளை

"அரசியல் கட்சித் தலைவர்களை எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்து கொள்ளக்கூடாது" என்று நடிகர் விஜய் கட்டளை பிறப்பித்துள்ளார்.

கல்பாத்தி அகோரமின் மகள் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலினும், நடிகர் விஜய்யும் வணக்கம் சொல்லி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சந்திப்பு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களை எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்று நடிகர் விஜய் கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும், எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ மீம்ஸ் உள்ளீட்டை எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

விஜய்யின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய்யின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.