‘இந்தியன் 2’ படத்தில் அரசியல் வசனங்கள் நீக்கமா?

‘இந்தியன் 2’ படத்தில் அரசியல் வசனங்கள் நீக்கமா?

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அரசியல் ரீதியான வசனங்கள் குறைக்கப்பட்டு வேறு பிரச்சினைகள் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி ஆகிய இடங்களில் நடந்துவருகிறது. தற்போது கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.

படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். ஊழல் பெருக்கெடுக்கும் சமூகத்தில் ஒருவர் அதற்கு எதிராக என்ன மாதிரியெல்லாம் களத்தில் இறங்குகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதற்கு முன் தயார் செய்து வைத்திருந்த கதையில் அரசியல்வாதிகளைக் கடுமையாகச் சாடும் வகையில் வசனங்கள் இருந்தனவாம். தற்போது இப்படத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினும் ஈடுபட்டிருப்பதால், அரசியல் விமர்சனங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டனவாம். அரசியல் தவிர வேறு சில கருத்துகளைச் சேர்க்கும் வேலைகளில் படக் குழு இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்து ‘இந்தியன் 2’ படக்குழு அதிகாரபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in