ஜப்தி செய்ய உத்தரவு; தடுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்: போலீஸ் பாதுகாப்பு கேட்கும் நீதிமன்ற ஊழியர்கள்

ஜப்தி செய்ய உத்தரவு; தடுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்: போலீஸ் பாதுகாப்பு கேட்கும் நீதிமன்ற ஊழியர்கள்
Silverscreen Inc.

`சட்டப்படி குற்றம்' படத்துக்கான விளம்பர செலவு 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2011-ம் ஆண்டு வெளியான `சட்டப்படி குற்றம்' திரைபடத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததை அடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திரைப்படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், ஒப்பந்தப்படி தொகையை வழங்கவில்லை என்றும் அதை வசூலித்து தரவேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை செலுத்த உத்தரவிட்டும், தொகையை வழங்காததால் உத்தரவை அமல்படுத்தக் கோரி சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமம் வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்றபோது, சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்ய விடவில்லை எனக் கூறி, காவல்துறை உதவி வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in