பஸ்சில் மாலை, பலூன் கட்டி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்: வழிமறித்து ஷாக் கொடுத்த போலீஸ்!

பஸ்சில் மாலை, பலூன் கட்டி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்: வழிமறித்து ஷாக் கொடுத்த போலீஸ்!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்தில் பலூன்களைக் கட்டி கொண்டாடிய ரசிகருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் சூர்யாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டும் வாழ்த்துகள் கூறியும் கொண்டாடினர். கேரள மாநிலம் கொல்லத்தில் வித்தியாசமாக, நடிகர் சூர்யாவின் பிறந்த தினத்தை கொண்டாடிய ரசிகருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

கேரளாவின் சவர- கொட்டியம் வழித்தடத்தில் ’வடக்கும்நாதன்’ என்ற தனியார் பேருந்து சென்று வருகிறது. இதன் உரிமையாளர், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பேருந்தின் முன் பகுதியில் சூர்யாவுக்கு வாழ்த்து போஸ்டரை ஒட்டினார். பிறகு இருபுறமும் பலூன்களைக் கட்டி தொங்கிவிட்டார். மாலைகளும் கட்டப்பட்டன.

பின்னர் இந்தப் பேருந்து வழக்கமான ரூட்டில் சென்றுகொண்டிருந்தது. கொல்லம் கச்சேரி சந்திப்பில் பேருந்து வந்தபோது, போக்குவரத்து போலீஸார் மறித்து நிறுத்தினர்.

ஓட்டுநரின் பார்வையை மறைக்கும் அளவுக்கு அந்த பலூன்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்ததாகக் கூறி பேருந்துக்கு அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in