31 நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படத்தின் இசை வெளியீடு

31 நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படத்தின் இசை வெளியீடு

31 நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் ’போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று நடந்தது.

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ' போலாமா ஊர்கோலம்'. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபுஜித், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார்.

மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபீக் ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.

வைசாலி சுப்பிரமணியன், டேவிட் பாஸ்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை கே.எம்.ரயான் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு இணைந்து வெளியிட்டனர்.

பிரபுஜித், சக்தி மகேந்திரா
பிரபுஜித், சக்தி மகேந்திரா

படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான பிரபுஜித் பேசும்போது, ''நானும் என்னுடன் படித்தவர்களும், பணியாற்றியவர் களும் என 31 நண்பர்கள் முதலீடு செய்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். நானும் இயக்குநரும் 5 ஆண்டு கால நண்பர்கள். இருவரும் சினிமா மீதான காதலை உணர்வுபூர்வமாகக் கொண்டவர்கள். அவர் திறமை மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. தரமான படைப்பை வழங்கியிருக்கிறார் என உறுதியாகச் சொல்வேன். படத்தில் பணி யாற்றிய 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களுக்கும், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிற்கும் நன்றி. முன்னாள் வீரர்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தியதுதான் இந்தப் படம்'' என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது, ''அண்மைக்காலமாக இணைய தளங்களில் நேர்காணல் வழங்குவதற்காகக் கட்டணம் வசூலிக்கிறேன். இந்தத் தொகையை ஏழை எளிய மக்களின் கல்விக்கு நன்கொடையாக வழங்கி வருகிறேன். ’போலாமா ஊர்கோலம்' என்ற தலைப்பு தமிழில் இருப்பதால் வரவேற்கிறேன். இதில் 60 வயதிற்கு மேற்பட்ட 20 கால்பந்து வீரர்கள் நடித்திருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் மட்டும் தான். இவர்கள் வயதாகாத இளைஞர்கள் ’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in