தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்: கொந்தளித்த கவிஞர் வைரமுத்து

தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்: கொந்தளித்த கவிஞர் வைரமுத்து

சென்னையில் ரயிலில் தள்ளி இளம்பெண் சத்யா கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா என்ற மாணவியை சதீஷ் என்பவர் தள்ளி விட்டுக்கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். காதல் தோல்வி காரணமாக கொலை செய்ததாக சதீஷ் போலீஸில் கூறினார். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

தமிழகத்தை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கவிதை வெளியிட்டுள்ளார். அதில்,

தனக்குக் கிடைக்காதது

யாருக்கும் கிடைக்கக்கூடாதென

ஒரு தங்க மான்குட்டியைத்

தண்டவாளத்தில்

தள்ளினான் ஒரு பேய்மகன்

தனக்குக் கிடைக்காததெல்லாம்

யாருக்கும் கிடைக்கக்கூடாதென

மனிதகுலம் நினைத்திருந்தால்

இந்த பூமி

ஒரு மண்டையோடு போலவே

சுற்றிக்கொண்டிருந்திருக்கும்

கிட்டாதாயின்

வெட்டென மற

என அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in