அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் காலமானார்!

அரசியல் கட்சியினர், திரையுலகினர் அஞ்சலி
எம்.ஜி.ஆர் உடன் புலமைப்பித்தன்
எம்.ஜி.ஆர் உடன் புலமைப்பித்தன்

அதிமுக முன்னாள் அவைத்தலைவரும் எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி என்று பல முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்குப் தமிழ் திரைப்படப் பாடல்களை எழுதியவருமான புலவர் புலமைப்பித்தன் காலமானார்.

புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

85 வயதான புலமைப்பித்தன் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

நீலாங்கரையில் உள்ள வீட்டில் அவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சியினரும் திரைத்துறையினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in