கங்கனா - மோடி
கங்கனா - மோடி

மூன்றாம் உலகப்போரை தடுத்து நிறுத்திய மோடி... சரவெடி கொளுத்திய கங்கனா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மூன்றாம் உலகப் போரைத் தடுக்க உதவியது என்று நடிகை கங்கனா பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம், மண்டி தொகுதியில் நடிகை கங்கனா பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார். ஜூன் 1-ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கங்கனா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்தில் கங்கனாவின் பேச்சுகள் நெட்டிசன்கள் மத்தியில் தொடர்ச்சியாக கேலிக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில், “மூன்றாம் போரைத் தடுத்து நிறுத்த ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பிரதமர் மோடி தான் வழிகாட்டியுள்ளார்” என்று அதிரடி கிளப்பி உள்ளார் கங்கனா.

அந்த வீடியோவில் கங்கனா, “ரஷ்ய அதிபர் புதினில் இருந்து உக்ரைன் மக்கள் வரை, தங்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதற்காக பிரதமர் மோடியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவரின் வழிகாட்டுதலை அவர்கள் மதிக்கிறார்கள். இதன் காரணமாகத்தான், மூன்றாம் உலகப்போர் இன்று நடக்கவில்லை” என்று பேசியுள்ளார்.

மேலும், ”பிரதமர் மோடி உலக மக்கள் அமைதிக்காக வெளிப்படையாகப் பேசுகிறார். இன்று இருக்கும் நவீன இந்தியாவின் பிம்பத்தை நாம் யாரும் பார்த்ததில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் இன்னும் சிந்திக்க வேண்டுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 கங்கனா
கங்கனா

’மூன்றாம் உலகப் போருக்கே ஃபுல் ஸ்டாப் வைத்தாரா மோடி?’ என்று கங்கனாவின் பேச்சை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். முன்னதாக, அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக தனக்குத்தான் செல்லும் இடமெல்லாம் அன்பு கிடைத்து வருகிறது என்று பேசியும் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்குள்ளானார் கங்கனா.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in