மாயாவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பகீர் குற்றச்சாட்டு கிளப்பும் பிரபல பாடகி!

மாயா, அர்ச்சனா
மாயா, அர்ச்சனா

பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பின்னணி பாடகி சுசித்ரா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ ஆகியோர் ஒன்று சேர்ந்து பிக் பாஸ் முன் வைத்தனர். இதனால், பிரதீப்புக்கு கடந்த வாரம் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது பிக் பாஸ் இல்லத்திலும், வெளியே பார்வையாளர்கள் மத்தியிலும் கடும் கோபத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

வெளியே இணையத்தில் பலரும் கமல்ஹாசன் இப்படி விசாரிக்காமல் வெளியேற்றிவிட்டார் எனவும் மீண்டும் பிரதீப்பை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் எனவும் சொல்லி வந்தனர்.

நடிகர் பிரதீப் ஆண்டனி
நடிகர் பிரதீப் ஆண்டனி

மேலும், நிக்சனும் பெண்களை பாடி ஷேமிங் செய்வது, ஐஷூவிடம் அத்துமீறி நடப்பது போன்ற காரியங்களால் அவரையும் வெளியேற்ற வேண்டும் எனவும் சொல்லி வந்தனர். மாயாவுக்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா ஒன்று சேர்ந்திருப்பதற்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், மாயாவால்தான் பிக் பாஸ் இல்லத்திற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பகிரங்க குற்றச்சாட்டை தனது சமீபத்திய பேட்டியில் முன்வைத்திருக்கிறார் சுசித்ரா.

அவர் பேசியிருப்பதாவது, “பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் எல்லோருக்கும் மாயா ஒரு லெஸ்பியன் என்பது தெரியும். அவர் கவுதம் மேனனின் உதவி இயக்குநர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.

பாடகி சுசித்ரா
பாடகி சுசித்ரா

மாயா லெஸ்பியனா இருப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவங்க லெஸ்பியனாக இல்லாத பூர்ணிமாவை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைக்கிறார். லெஸ்பியன்கள் தாங்கள் விரும்பும் பெண்கள் வேறொருவருடன் நெருக்கமாக பழகுவதை விரும்பவே மாட்டார்கள். 

ஐஷூவின் குடும்பத்தினர் ரொம்ப பாவம். தெருவுல அவங்களால தலை காட்ட முடியாது. ஆரம்பத்துல ஐஷூவ எல்லாருக்குமே பிடித்திருந்தது. ஆனால் இப்போ மாயா கேங்கில் சேர்ந்து விஷமாகிட்டாள்” என சுசித்ரா பேசி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in