
அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை ஜாக்குலின் கேரியரி மரணமடைந்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் நடிகை ஜாக்குலின் கேரியரி(48). அவர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற அழகுப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர். லத்தீன், அமெரிக்க சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜாக்குலின் பிரபல மாடலாகவும் விளங்கினார்.
இந்நிலையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலில் காலமானார்.
இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இன்று எங்களைப் பின்தொடர்பவர்களுக்கு சோகமான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறோம்: 1996-ல் புன்டா டெல் அகுவா மாவட்டத்தின் அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாக்குலின் கேரியரி காலமானார். இந்த கடினமான தருணத்தில் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு வரை ரோமா தியேட்டரில் நடத்தப்பட்ட எங்கள் நாடகத்தில் அவர் அற்புதமாக நடித்தார். ஜாக்குலின் கேரியரி பூட்டிக் என்ற உயர்தர பேஷன் கடையும் வைத்திருந்தார். காஸ்மெடிக் சர்ஜரியால் ஏற்பட்ட பக்கவாதத்தால் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் காலமானார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அறுவை சிகிச்சை மூலம் தங்கள் இளமைத் தோற்றத்தை அழகுபடுத்த நடிகைகள், மாடல்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அதில் பலர் அகால மரணமடைகின்றனர்.
இந்த அறுவைச் சிகிச்சையின் போது காஸ்மெடிக் சர்ஜரிக்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம் காரணமாக இயத்துடிப்பு திடீரென குறைந்து மூச்சுத்திணறல், மாரடைப்பு, உறைதல், ரத்தக்கசிவு போன்றவற்றை ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
அது போல ரத்த உறைவு தான் ஜாக்குலின் மறைவிற்கும் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அவர் இறுதிமூச்சின் போது அவரது குழந்தகள் சோலி மற்றும் ஜூலியன் ஆகியோர் அருகில் இருந்தனர். ஜாக்குலின் திடீர் மரணம் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!