அந்தரத்தில் ஊஞ்சல், ஆவேச ஆண்ட்ரியா: மிரட்டும் `பிசாசு 2’ டீசர்

அந்தரத்தில் ஊஞ்சல், ஆவேச ஆண்ட்ரியா: மிரட்டும் `பிசாசு 2’ டீசர்

மிஷ்கின் இயக்கியுள்ள ’பிசாசு 2’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் நாகா, ராதாரவி, பிரயாகா மார்ட்டின், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடித்த படம், ’பிசாசு’. அரோல் கரோலி இசை அமைத்திருந்த இதை இயக்குநர் பாலா தயாரித்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இதன் அடுத்த பாகத்தை இப்போது இயக்கியுள்ளார் மிஷ்கின். ’பிசாசு 2’ என்று தலைப்பு வைத்துள்ள இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

நடிகை ஆண்ட்ரியா, வேற லெவல் லுக்கில் தோன்றுகிறார். நிர்வாண ஓவியம், அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல், எரியும் மெழுகுவர்த்தியின் அருகே பயங்காட்டும் பொம்மை, கொடூரக் கொலையா என டீசர் மிரட்டுகிறது. குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்று ஏற்கெனவே அவர்கள் அறிவித்திருந்த நிலையில், இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in