‘அந்த சிரிப்பைக் காண பல வருடங்கள் காத்திருந்தேன்’ : இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் நெகிழ்ச்சி ட்விட்

‘அந்த சிரிப்பைக் காண பல வருடங்கள் காத்திருந்தேன்’ : இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின் நெகிழ்ச்சி ட்விட்

“பேரறிவாளன் விடுதலையால் அற்புதம்மாள் முகத்தில் அந்த சிரிப்பைக் காண பல வருடங்கள் காத்திருந்தேன்” என இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', விஜய் சேதுபதி நடித்த 'பீட்சா' மற்றும் 'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தனது ட்விட்டரில் பேரறிவாளன் விடுதலை குறித்து பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in