அந்தப் பாடல் இப்படி ஹிட்டாகும்னு நினைக்கவே இல்லை: சமந்தா மகிழ்ச்சி

அந்தப் பாடல் இப்படி ஹிட்டாகும்னு நினைக்கவே இல்லை: சமந்தா மகிழ்ச்சி

’புஷ்பா’ படத்தின் ’ஊ சொல்றியா மாமா’ பாடல், இந்தியா முழுவதும் ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா இப்போது, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, பான் இந்தியா படமாக உருவாகியுள்ள, ஷாகுந்தலம் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து ’யசோதா’ என்ற படத்திலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

’த பேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சமந்தாவுக்கு ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’ஊ சொல்றியா மாமா’பாடல் மேலும் புகழை கொடுத்துள்ளது. இந்நிலையில் மும்பையில் நடந்த விருது விழாவில் கலந்துகொண்ட சமந்தாவிடம் இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு கேட்கப்பட்டது.

அப்போது சமந்தா கூறும்போது, ``ஊ சொல்றியா’ பாடல் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. இந்தியா முழுவதும் பாடல் ஹிட்டாகி இருக்கிறது. ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்பை விவரிக்க முடியாது. இந்தப் பாடல் ஹிட்டானதால், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளவர்கள், நான் நடித்த மற்றப் படங்களை மறந்துவிட்டார்கள். ’ஊ சொல்றியா’ பாடல் மூலமாகவே அடையாளம் காண்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in