ஆஹா 12,000 பாடல்கள்... ஆஷா போஸ்லேவுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே

நேற்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவுக்கு ஏராளமான திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'மெலோடி குயின்' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, 1933-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் பிறந்தவர். அவர் நேற்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

துபாயில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அந்த விழாவினூடே தனது பிறந்தநாளையும் கொண்டாடினார். அப்போது பேசிய ஆஷா போஸ்லே, நான் விதியை அதிகம் நம்புகிறேன், எனக்கு எது தேவையோ அது என்னை வந்து சேரும் என்றார்.

ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே

இவர், 1943-ம் ஆண்டு திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். தனது 80 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 12 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். தமிழில் ’செண்பகமே.. செண்பகமே’, ’ஓ... பட்டர்பிளை...’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

ஆஷா போஸ்லேக்கு மத்திய அரசு, திரைப்படத் துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது. ஆஷா போஸ்லே மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in