தியேட்டர்களில் உண்டியல் வைத்து ரசிகர்கள் நிதி வசூல்: இது ஆந்திர நெகிழ்ச்சி!

தியேட்டர்களில் உண்டியல் வைத்து ரசிகர்கள் நிதி வசூல்: இது ஆந்திர நெகிழ்ச்சி!

தியேட்டர் கட்டணம் அதிகரித்திருப்பதால், தயாரிப்பாளரின் நஷ்டத்தை சரிகட்ட, தியேட்டர்களில் உண்டியல் வைத்து ரசிகர்கள் நிதி வசூலித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’படம், தெலுங்கில் ‘பீம்லா நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிருத்விராஜ் கேரக்டரில் ராணா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.

‘பீம்லா நாயக்’ -ராணா, பவன் கல்யாண்
‘பீம்லா நாயக்’ -ராணா, பவன் கல்யாண்

ஆந்திர அரசு, சில மாதங்களுக்கு முன் தியேட்டர்களுக்கு புதிய டிக்கெட் விலையை நிர்ணயித்தது. அதன்படி, ஏசி தியேட்டர்கள் ரூ.150 வரையிலும், மல்டிபிளக்ஸில் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஐமேக்ஸ் தியேட்டர்களில் ரூ.300 வரையிலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டது. இது தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிக்கெட் கட்டணத்தை குறைக்கும்படி, திரையுலகினர் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அரசு குறைக்கவில்லை.

 பவன் கல்யாண்
பவன் கல்யாண்

இந்நிலையில், ‘பீம்லா நாயக்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இதன் வெளியீட்டை முன்னிட்டு, காலங்காலமாக தெலுங்கு சினிமாவில் தொடரும் சிறப்புக் காட்சிகள், ரசிகர்கள் காட்சிகளுக்கு அரசு திடீர் தடை விதித்தது. நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணத்துக்கு அதிகமாக கூடுதல் தொகை வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்களை அரசு எச்சரித்துள்ளது. உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க அதிகாரிகளையும் அரசு நியமித்துள்ளது.

இதனால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம் என்று நினைத்த பவன் கல்யாண் ரசிகர்கள், அதைச் சரிகட்ட தியேட்டர்கள் முன் உண்டியல் வைத்து நிதி திரட்டி வருகின்றனர். இது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.