வசூலில் புதிய சாதனை படைத்த 'பதான்' : உலக அளவில் 1000 கோடியை அள்ளிய முதல் இந்திப் படம்

’பதான்' படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன்
’பதான்' படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன்வசூலில் புதிய சாதனை படைத்த 'பதான்' : உலக அளவில் 1000 கோடியை அள்ளிய முதல் இந்திப் படம்

ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. உலக அளவில் 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை 'பதான்' பெற்றுள்ளது.

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியானது. கடந்த 2018-ம் ஆண்டு ‘ஜீரோ’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வெளியானது.

இதனால், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே டிக்கெட் முன்பதிவு, வெளியான பிறகு டிக்கெட் வசூல் என படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகளவில் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் 623 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 377 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம், உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் இந்திப் படம் என்ற பெருமையை ‘பதான்’ எட்டியுள்ளது. இதற்கு முன்பு ‘கேஜிஎஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய பான் இந்திய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in