பாலிவுட் வரலாற்றில் ‘பதான்’ புதிய சாதனை: டிக்கெட் முன்பதிவில் ரூ.60 கோடி!

பாலிவுட் வரலாற்றில் ‘பதான்’ புதிய சாதனை: டிக்கெட் முன்பதிவில் ரூ.60 கோடி!

ஷாருக்கானின் பதான் திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்னரே பாலிவுட் வரலாற்றின் சாதனைகளை உடைத்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் ஜன.25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் பதான். 4 வருட இடைவெளியில் ஷாருக் படம் திரைக்கு வருவதால், பதான் மீதான ரசிக எதிர்பார்ப்புகள் எகிறி கிடந்தன. கரோனா முடக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்த தெக்கத்தி திரைப்படங்களின் தாக்கம் ஆகியவற்றால் தேங்கிக்கிடந்த பாலிவுட் படங்களின் வெற்றிக்கு பதான் மூலம் நல்லதொரு மீட்சி கிடைக்கும் என்றும் நம்பிக்கையும் அங்கே விரவிக் கிடந்தது.

அதனை உறுதிபடுத்துவது போல, பதான் திரைப்படத்துக்கான செவ்வாய் மாலை வரையிலான டிக்கெட் முன்பதிவு ரூ.60 கோடியை தாண்டியுள்ளது. இதற்கு முன்னர் ரூ.41 கோடி வசூலித்த வகையில் ’வார்’ திரைப்படத்தின் சாதனையை பதான் முறியடித்துள்ளது. இது பாலிவுட்டின் வரலாற்று சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கணக்கும், இந்திய அளவில் மட்டுமே. கடல்கடந்த நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் பதான் படத்துக்கான முன்பதிவு கணக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை.

முன்னதாக, பதான் திரைப்படத்துக்கு எதிராக வீசிய எதிர்ப்பலையே ஷாருக் படத்துக்கு சிறப்பான விளம்பரமாக அமைந்திருப்பது, அதன் முன்பதிவு சாதனையிலும் பிரதிபலித்துள்ளது.

ஜன.24 நள்ளிரவு முதலே திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லரான பதான் திரைப்படம், இந்தி மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் காணக்கிடைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in