'பருந்தாகுது ஊர்க்குருவி’ பர்ஸ்ட் லுக்-கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

'பருந்தாகுது ஊர்க்குருவி’ பர்ஸ்ட் லுக்-கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

’பருந்தாகுது ஊர்க்குருவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

லைட்ஸ் ஆன் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படம், ’பருந்தாகுது ஊர்க்குருவி’. கோ.தனபாலன் இயக்கும் இந்தப் படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா, காயத்திரி ஐயர், வினோத் சாகர், அருள் டி. சங்கர், கோடங்கி வடிவேல், ஈ ராம்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். ரெஞ்சித் உண்ணி இசை அமைக்கிறார்.

புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இரண்டு பேர் மாட்டிக்கொள்கின்றனர். ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை, ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் சொல்லும் படம் இது.

சர்வைவல் திரில்லர் படமாக உருவாகும் இது, 'வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது'  எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். டிரெய்லர், இசை விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in