பொன்னியின் செல்வனால் பார்த்திபனுக்கு வந்த புது சிக்கல்!

பொன்னியின் செல்வனால் பார்த்திபனுக்கு வந்த புது சிக்கல்!

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தால் ‘இரவின் நிழல்’ ஓடிடி தளத்தில் வெளியாவது தள்ளிப் போகிறது என நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப்படம் உருவானது. இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்துக் கடந்த சில தினங்களுக்கு முன் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் ‘அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’  வந்தே விடும்! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் இருக்கிறோம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அது குறித்த பதிவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “அமேசானில் இன்று முதல் ’பொன்னியின் செல்வன்’. எனவே, வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’- செய்தி.

பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம். இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை!” என வேதனையாகப் பதிவு செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in