மைக்கைப் பிடிக்காமல் விட்ட ரோபோ சங்கருக்கு பார்த்திபன் முத்தம்: வைரலாகும் புகைப்படம்

மைக்கைப் பிடிக்காமல் விட்ட ரோபோ சங்கருக்கு பார்த்திபன் முத்தம்:  வைரலாகும் புகைப்படம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மீது மைக்கை எறிந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் பார்த்திபன் இன்று வெளியிட்டுள்ள ட்விட் செய்தி வைரலாகி வருகிறது.

ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இரவின் நிழல் படத்தை பார்த்திபன் இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பார்த்திபனும், ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பார்த்திபனின் மைக் வேலை செய்யவில்லை. இதனால் கடுப்பான பார்த்திபன், “இதை முன்பே சரி செய்திருக்கக் கூடாதா?” எனக் கேட்டதோடு கையில் இருந்த மைக்கையும் தூக்கி மேடைக்கு கீழே இருந்த நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் மீது வீசினார். மேடையில் தான் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பார்த்திபன் பேசினார்.

இந்த பிரச்சினை சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இரவின் நிழல் பட நிகழ்ச்சியின் போது தான் நடந்துகொண்ட விதம் பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும், கோபப்பட்டதை நியாயப்படுத்தவில்லை என்றும். மைக்கை தூக்கி எறிந்துவிட்டு மனதை உடைத்துக்கொண்டேன் என்றும் பேசி பார்த்திபன் வீடியோ வெளியிட்டிருந்தார்

இந்த நிலையில், மைக்கை நீட்டியபடி ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை தனது ட்விட்டரில் இன்று பகிர்ந்துள்ள பார்த்திபன் "மைக்கை கண்டுபிடித்தவர் Emile Berliner, மைக்கை catch பிடிக்காமல் விட்டவர் robo shankar, மைக்கால் பிடிபட்டவர் radhakrishnan parthiban, முடிவில் முத்தமிட்டவர்" என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in