'பரியேறும் பெருமாள்' திரைப்பட நடிகர் திடீர் மரணம்

புதுவீட்டு முகப்பில் தங்கராஜ்
புதுவீட்டு முகப்பில் தங்கராஜ் 'பரியேறும் பெருமாள்' திரைப்பட நடிகர் திடீர் மரணம்

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நாயகன் கதிரின் தந்தையாக நடித்த தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இது நெல்லைவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். திருநெல்வேலியை மையப்படுத்திய இந்தக் கதைக் களத்தில் நாயகன் கதிரின் அப்பாவாக நடித்தவர் தங்கராஜ். இவர் தெருக்கூத்தில் பெண் வேடம் கட்டும் கலைஞர் ஆவார். மேலும், மற்றநேரங்களில் காய்கறி வியாபாரமும் செய்துவந்தார். இவருக்கு 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மிகவும் அடர்த்தியான அந்த பாத்திரத்தை சிறப்பாக செய்து இருப்பார் தங்கராஜ்.

அவரின் ஏழ்மைச் சூழலைக் கருத்திக் கொண்டு அண்மையில் இவருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தொடங்கியது. நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணுவும் இதற்கென சில முயற்சிகளை முன்னெடுத்தார். அண்மையில் புது வீட்டில் குடியேறினார் தங்கராஜ். இந்நிலையில் வயோதிகத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த தங்கராஜ் இன்று அதிகாலை உயிர் இழந்தார். அவரது மறைவு கிராமியக் கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in