‘எனது 15 வயதில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டேன்’ -பாரிஸ் ஹில்டன் பகிரங்கம்!

பாரிஸ் ஹில்டன்
பாரிஸ் ஹில்டன்

‘என்னுடைய 15 வயதில் நன்கு அறிமுகமான வயதான ஆண்களால் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானேன்’ என்று பாரிஸ் ஹில்டன் பகிரங்கம் தெரிவித்துள்ளார்.

பிரபல அமெரிக்க மாடலும், நடிகையுமான பாரிஸ் ஹில்டனுக்கு தற்போது 42 வயதாகிறது. கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசாக பிறந்து, தனது வசீகரத்தால் தனியாக ஜெயித்தவர் இவர். உலகமெங்கும் இவருக்கு என தனி ரசிகர்கள் உண்டு. வெற்றி பெற்ற பெண்கள், துணிச்சலாக தங்கள் வாழ்வின் கசப்பனுபவங்களை வெளிப்படையாக பதிவு செய்யும் வரிசையில் ஹில்டனும் தற்போது சேர்ந்திருக்கிறார்.

இவரது புதிய புத்தகமாக 'பாரிஸ் தி மெமோயிர்' மார்ச் 3 அன்று வெளியாக இருக்கிறது. அதனையொட்டி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வரும் பாரிஸ் ஹில்டன், அப்படியான ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மோசமான பாலியல் பலாத்கார அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். தனது 15 வயதில் ஆசிரியர் மற்றும் இன்னொரு ஆண் என 2 வயது முதிர்ந்த ஆண்களால் தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக தெரிவித்திருக்கிறார்.

இவற்றில் இரண்டாவது ஆண், தனது குடும்பத்துக்கு நன்கு அறிமுகமானவர் என்றும், பானத்தில் மயக்க மருந்தை கலந்து 2 மணி நேரத்துக்கு தன்னை நாசம் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அரை மயக்க நிலையில் இருந்த தன்னிடம் அவர் பேசியது, மிரட்டியது அனைத்தும் அதன் பின்னரான பல நாட்களை நரகமாக்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் கடந்து வாழ்வில் தான் கைக்கொண்ட இலக்குகளை, பெரும் போராட்டத்துக்கு பின்னரே அடைய முடிந்ததாகவும், அவை அனைத்தையும் புதிய புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அடக்கிய ஒரு ஆவணப்படம் வாயிலாக அதிர்வுகளை ஏற்படுத்தியவர் பாரிஸ் ஹில்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in