அல்லு அர்ஜுன் படத்தை டப் செய்து வெளியிட எதிர்க்கும் பிரபல நடிகர்!

இது ஆரோக்கியமானதல்ல என விமர்சனம்
அல்லு அர்ஜுனின் ’அலா வைகுந்தபுரம்லோ’
அல்லு அர்ஜுனின் ’அலா வைகுந்தபுரம்லோ’

அல்லு அர்ஜுனின் ’அலா வைகுந்தபுரம்லோ’ படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட பிரபல நடிகர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம், ’அலா வைகுந்தபுரம்லோ’. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படத்தில், தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, நிஷாந்த், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இதன் இந்தி டப்பிங் உரிமை, கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மனீஷ் ஷா என்பவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், ’அலா வைகுந்தபுரம்லோ’படம் ’ஷேஜாதா’ (Shehzada) என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. ரோகித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், கீர்த்தி சனான் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. பூஷன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனம் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கிறது.

பரேஸ் ராவல்- அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே
பரேஸ் ராவல்- அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே

இதற்கிடையே, ’அலா வைகுந்தபுரம்லோ’ படம் டப் செய்யப்பட்டு, டிவி-யிலோ, ஓடிடி தளங்களிலோ வெளியானால், ’ஷேஜாதா’ படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால், டிவி மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடாமல் இருக்க, மனீஷ் ஷாவுக்கு ரூ.8 கோடியை தயாரிப்பாளர் கொடுத்ததாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் வரும் 26ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா’ படம் இந்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு ’அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் பரேஸ் ராவல் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

``அலா வைகுந்தபுரம்லோ’ டப் செய்யப்பட்டு இந்தியில் வெளியாக இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனால், ’ஷேஜாதா’வின் வணிகம் பாதிக்கப்படும். இதுபோன்ற படங்களின் உரிமைகளை வாங்கும்போது, படம் வெளியாகும் வரை இந்தியில் டப் செய்து வெளியிட மாட்டோம் என்று ஒப்பந்தம் போட வேண்டும். இல்லை என்றால், ரீமேக் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. பணம், நேரம், தொழில் அனைத்தும் வீணாகிறது. ’புஷ்பா’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் புகழ் உச்சத்தில் இருக்கிறது. அதனால், அந்தப் படத்தை டப் செய்து வெளியிடுகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in