71 YRS OF பராசக்தி | குதிரை மூஞ்சி... ஒல்லி உடம்பு... சிவாஜி கணேசனை நிராகரித்த 'பராசக்தி'!

நடிகர் சிவாஜி கணேசன்...
நடிகர் சிவாஜி கணேசன்...'பராசக்தி' படத்தில்...

தமிழ் சினிமாவின் வரலாற்றில் நடிகர்களுக்கு அறிமுகமே அழுத்தமாய் பெயர் கொடுப்பது வெகு சிலருக்குத்தான். அந்த அறிமுகம் தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களால் நினைவுக்கூரப்படுவது அந்த கலைஞனின் திறமைக்குச் சான்று. அப்படியான ஒரு அறிமுகம்தான் 'பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசனுக்கு அமைந்தது. 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி இன்றோடு 71 ஆண்டுகள். ஆகிறது. படம் குறித்து அசைபோட ஆயிரம் நினைவுகள் உண்டு. அதில் நம் வாசகர்களுக்காக சில...

* மேடை நாடகங்களில் சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' நாடகத்தில் கணேசனின் திறமையைப் பார்த்து சிலாகித்த தயாரிப்பாளர் பெருமாள் முதலியார், தான் தயாரிக்க இருந்த புதிய திரைப்படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம்தான் 'பராசக்தி'.

* 'பராசக்தி' படத்திற்கு ஃபைனான்ஸ் செய்து வந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார், ஒருநாள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சிவாஜியைப் பார்த்தார். பின்பு பெருமாள் முதலியாரிடம், 'பையன் நல்லாதான் நடிக்கிறான். ஆனா, குதிரை மூஞ்சி, உடம்பு ஒல்லியா இருக்கு. கே.ஆர்.ரங்கசாமி இல்லைன்னா டி.ஆர். மகாலிங்கத்தை வச்சு படம் எடுக்கலாம்' என்று சொன்னார்.

பராசக்தி படத்தில்...
பராசக்தி படத்தில்...

*இந்தத் தகவல் அண்ணாவின் காதுகளுக்குச் செல்ல சிவாஜிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதன் பிறகு சிவாஜிக்கு சில மாதங்கள் ஓய்வும், நல்ல உணவும் கொடுத்து உடம்பைத் தேற்றி வரச் சொன்னார்கள். அதன் பின்பு படப்பிடிப்பிற்கு வந்து நடித்தார் சிவாஜி.

தன்னை படத்திலிருந்து நீக்காமல் அறிமுகப்படுத்திய நன்றிக் கடனுக்காக பெருமாள் முதலியார் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று மரியாதை செலுத்தி வருவதை இறுதி வரை வழக்கமாகக் கொண்டிருந்தார் சிவாஜி.

*சமூக சீர்த்ததிருத்தக் கருத்துகளைப் பொட்டில் அறைந்தாற் போல இந்தப் படம் பேசியது. கலைஞரின் வசனங்களும், சிவாஜியின் நடிப்பும் படத்தின் பெரும்பலம்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்'பராசக்தி' படத்தில்...

*உண்மையில், 'பராசக்தி' திரைப்படம் கல்யாணி என்ற பெண் கதாபாத்திரத்தை பற்றியது. ஆணாதிக்கமும் அதற்கு துணை போகும் புரோகிதமும் எப்படி கல்யாணி என்ற பெண்ணை துன்புறுத்தி விரட்டுகிறது என்பதுதான் கதை.

*'ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' என சிவாஜி கோர்ட்டில் நின்று பேசும் வசனங்கள் இப்போது வரை ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. இந்த வசனங்களைப் பேசிக் காட்டியே திரையுலகிற்குள் வாய்ப்பு கிடைத்து நடிகர்களானவர்களின் லிஸ்ட் பெரியது.

படம் நெடுக பல நாத்திகக் கருத்துகளைப் பொட்டில் அறைந்தாற்போல பேசிய இந்தப் படத்திற்கு மக்கள் அந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைக் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in