நடிகர் சூரி பிறந்த நாளுக்கு அதிர்ச்சி கிஃப்ட் கொடுத்த 'பாண்டியம்மா'!

நடிகர் சூரி  பிறந்த நாளுக்கு அதிர்ச்சி கிஃப்ட் கொடுத்த 'பாண்டியம்மா'!

நடிகர் சூரியின் பிறந்த நாளான இன்று நடிகை இந்திரஜா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பரபரப்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பாண்டியம்மா என்ற பெயரில் கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் இந்திரஜா. நகைச்சுவை நடிகர் ரோபா சங்கரின் மகளான இந்திரஜா சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் அதிதியின் தோழியாக இந்திரஜா நடித்திருந்தார். அப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் தன்னை அவர் இடுப்பில் தூக்கி வைத்திருந்ததாக மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை ' படத்தில் கதை நாயகனாக சூரி நடிக்கிறார். இன்று அவரின் 45-வது பிறந்த நாளாகும். அவருக்கு சக நடிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். நடிகை இந்திரஜா அவரது இன்ஸ்டா பக்கத்தில் சூரி பிறந்த நாளுக்காக சில புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார்.

அதில், சூரியை இடுப்பில் இந்திரஜா தூக்கி வைத்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ள இந்திரஜா, " உங்களோட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம் மாமா… உங்கள் கையில் வளர்ந்து இன்று உங்களுடனே நடிப்பது பாக்கியம் மற்றும் பெருமை மாமா….. குத்துகள்ளு…… கொலவிக்கள்ளூ" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக் குவிந்து வருகிறது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in