மிஸ் யூ விஜய் அண்ணா... ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட் எமோஷனல் பதிவு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

விஜயின் அரசியல் வருகை குறித்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் வெங்கட் எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே இணையவெளியில் பேசு பொருளாகி உள்ளார். வருகிற 2026-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக சொல்லி இருக்கும் அவர், மக்கள் பணிக்காக சினிமாவை விட்டு விலகுவதாகவும் கூறி உள்ளார்.

விஜயின் அரசியல் வருகை அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்திய அதே சமயம், அவர் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் விஜயின் வசீகரத்தையும் அவரது நடனத்தையும் பார்ப்பதற்கே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் சினிமாவை விட்டு விலகும் முடிவைக் கேட்டு சுட்டிக் குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுத வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்த சூழ்நிலையில்தான், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் நடிகர் வெங்கட் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘நம் எல்லோருடைய வாழ்விலும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேற வேண்டும் என எல்லா முயற்சிகளையும் எடுப்போம். எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. விஜய் அண்ணாவுடன் ஒரு படத்தில் ஒரு காட்சியாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் அது.

இன்று, நேற்று, அதற்கு முந்தின நாள் என தினமும் என்னுடைய வேண்டுதல் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், அது இனி நடக்கப் போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது’ எனக் கண்கலங்கியபடி கூறியுள்ளார். மேலும், ‘இனி சினிமாவில் அவரது நடனம், சண்டைக் காட்சிகள், காமெடி என அனைத்தையும் மிஸ் செய்வேன்’ எனவும் வருத்தப்பட்டுக் கூறியுள்ளார் வெங்கட்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in